அஜீத் ஆசைப்பட்ட இயக்குனர்! அணை போட்டு தடுத்த கமல்!

அஜீத் ஆசைப்பட்ட இயக்குனர்! அணை போட்டு தடுத்த கமல்!


அஜீத்தின் அடுத்த படம் யாரோடு? இந்த கேள்விக்கு விடை தெரிந்தால், அவரது ரசிகர்கள் நிம்மதியாக உறங்கப் போய்விடுவார்கள். ஆனால் காக்கா கத்தி ஆந்தை முழிச்ச கதையாக போய்விட்டது அஜீத்தின் ஆசை.
என்னது… அஜீத் ஆசைப்பட்டாரா? ஆமாம்னு சொன்னா நம்பவா போவுது அவரது அன்பு ரசிகர்களின் கூட்டம். யெஸ்… மீண்டும் சிவாவோடு சேர்ந்து படம் தருவது என்கிற எண்ணத்தில் வெடிகுண்டு வைத்துவிட்டது விவேகம். சுமார் 15 லிருந்து 25 வரைக்கும் கோடிகளில் நஷ்டம் என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்டது படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களின் வருத்தக்குரல்.
இனிமேலும் சிவா மீது நம்பிக்கை வைக்க அஜீத் என்ன உலகம் தெரியாதவரா? எந்திரன் 2 படத்தை முடித்துவிட்ட ஷங்கருடன் இணைந்து ஒரு படத்தை தரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாராம். அதற்கேற்றார் போல ஷங்கர் சைடிலிருந்து ஒரு பாசிட்டிவ் பதில் வந்ததாகவும் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும் முன்னே, ஒரு திடீர் கல் வந்து குறுக்கே முளைத்துவிட்டதாம். அதுதான் கமல்.
‘இந்தியன்’ படத்தில் ஷங்கருக்கு கமலும், கமலுக்கு ஷங்கரும் கொடுத்த குடைச்சல்களால், நேரில் பார்த்தாலும் பார்க்காதது போலவே நடந்து கொண்ட இருவரும் இப்போது பேஸ்ட் போட்டு ஒட்டாத குறையாக பேசி சிரிக்கிறார்கள். கமலே “நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்” என்று அழைக்க, எந்திரன் பணிகளுக்கு இடையே இந்த வேலைகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம் ஷங்கர்.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.

No comments